மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC, இபிஎஃப்ஓ அமைப்பில் (EPFO) அமலாக்க அதிகாரிகள் மற்றும் உதவி நிதி ஆணையர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் UPSC–upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 17, 2023 ஆகும். இதன் மூலம் 577 காலி பணியிடங்களை நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்: மொத்தம் 577 காலியிடங்கள் (418 அமலாக்க அதிகாரி மற்றும் 159 உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர்) இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படும்.
தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்ச வயது 30 ஆண்டுகள். இடஒதுக்கீடு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு, விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு இருக்கும்.
தேர்வு செயல்முறை: இந்த UPSC ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு இணைப்பு வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
UPSC வேலை அறிவிப்பின் நேரடி இணைப்பு : https://www.upsc.gov.in/sites/default/files/Spl-Advt-No-51-2023-engl-250223.pdf