fbpx

டெல்லியில் இரண்டாவது முறை குண்டுவெடிப்பு..? பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகளா? – உச்சகட்ட பரபரப்பு 

தேசிய தலைநகர் டெல்லியில் பிரசாந்த் விகார் பகுதியில் உள்ள PVR திரையரங்கம் அருகே பலத்த வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் வெள்ளை நிறத்தில் தூள் போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இடம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறியும் குழு, போலீஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மோப்ப நாய் துணையுடன் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில்,”தங்களுக்கு காலை 11:48 மணிக்கு அவர்களுக்கு பெரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டதாக அழைப்பு ஒன்று வந்தது. உடனே நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தோம்” என தெரிவித்தனர். குண்டுவெடிப்பு தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தது யார் என்பது இன்னும் தெரியவரவில்லை.

டெல்லியின் இதே பிரசாந்த் விஹார் பகுதியில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி அன்று அங்குள்ள சிஆர்பிஎஃப் பள்ளியின் சுவரில் ஒரு மர்ம பொருள் பயங்கரச் சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்திலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த குண்டுவெடிப்பு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தின்போது, மர்ம பொருள் வெடித்த சத்தம் சில கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. 

Read more ; அன்லிமிடெட் கால்.. தினமும் 2 ஜிபி டேட்டா.. 100 ரூபாய்க்குள் அசத்தல் திட்டங்களை வழங்கும் BSNL..

English Summary

Delhi blast: Explosion reported near PVR in Prashant Vihar, one injured, probe on

Next Post

தொடர்ந்து கண்ணாடி அணிவதால் தழும்புகள் ஏற்படுகிறதா..? அதை எளிமையாக நீக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

Thu Nov 28 , 2024
Wearing glasses is a must for many of us, but most people don't like wearing them.

You May Like