பாஜக முக்கிய தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மற்றும் மாநிலங்களவையில் இருந்து ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களின் தன்னை மோசமான நடத்தியதாகவும், அவமானத்தால் நான் மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறினார்.
மே 10 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தான் எம்எல்ஏ பதவி மற்றும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சுயேச்சையாக போட்டியிடுவதா அல்லது வேறு அரசியல் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில பாஜகவில் இருந்து தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து தொடர்ந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.