சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘என் உயிரினும் மேலான..’ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பரிசுகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘திமுக பேசிப்பேசியே வளர்ந்தவங்க என்று சொல்வார்கள், உலகப் புரட்சி, பிற்போக்குத்தனம் குறித்து பேசிய இயக்கம் திமுக. துணை முதல்வர் என்பது பதவி கிடையாது. அது பெரும் பொறுப்பு. அந்த பொறுப்பை உணர்ந்து உதயநிதி செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால் என்னை பொறுத்தவரை அந்த பொறுப்பை நான் அவருக்கு கொடுத்ததை ஒரு பயிற்சியாக கருதுகிறேன். அப்படி பார்க்கும்போது நான் வைக்கிற ஒவ்வொரு தேர்விலும் அவர் சென்டம் ஸ்கோர் செய்கிறார்.
நீட் தேர்வுக்காக கையெழுத்து இயக்கம், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட ஏராளமான பணிகளை செய்து வருகிறார். திமுகவால் தமிழ்நாடு வளரனும் என்ற லட்சியப் பாதையில் இளைஞர் அணி செயல்படுகிறது. கலைஞரை ஏன் கொண்டாடப்படுகிறார் என்று சொன்னால் அதற்கான விடை தான் அவர் பேச்சு. எனக்கு 18 வயது இருந்த பொழுது கல்லூரி மாணவராக மேடையில் இருந்தேன். மாநாட்டில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான மாநாட்டில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள், எந்த தியாகத்தையும் செய்ய தயார், என் தந்தைக்கு 4 பிள்ளைகள் உள்ளோம், என் ஒருவனை இழப்பதால் அவர் வருந்தமாட்டார் என்று சொன்னேன்.
என்னுடைய பேச்சுக்கு கலைஞர் என்ன சொன்னார் என்றால் ‘நான் ஸ்டாலினை மட்டும்மல்ல ஸ்டாலினுடன் சேர்த்து இந்த நான்கு பிள்ளைகளை தியாகத்திற்கு வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன். நான் உழைத்து உழைத்து எழுதி சம்பாதித்த குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்த குடும்பத்தில் ஒரு ஸ்டாலின் அல்ல நான்கு பிள்ளைகளையும் நாட்டுக்காக போனாலும் பரவாயில்லை. ஆனால் ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் இருக்கிறீர்களே உங்களை நம்பி உங்களது பெற்றோர்கள் உங்களை படிக்க அனுப்பி இருக்கிறார்கள். முதலில் வீட்டைக் காப்பாற்றுங்கள் பின்னர் நாட்டை காப்பாற்றுங்கள்’ என கலைஞர் சொன்னார்.
Read more ; தள்ளாடும் தவெக மாநாடு… படையெடுக்கும் மக்கள் கூட்டம்.. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!!