fbpx

இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை சரிவு…! மத்திய பொது விநியோகத் துறை தகவல்..!

சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிய போக்கில் உள்ளன, இது இந்தியாவில் சமையல் எண்ணெய் துறையில் சாதகமான சூழ்நிலையை அளிக்கிறது. உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு மத்தியில் சமையல் எண்ணெய்களின் சில்லறை விலையை மேலும் குறைப்பது குறித்து ஆலோசிக்க, முன்னணி தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு சமையல் எண்ணெய்களின் உலகளாவிய விலைகள் ஒரு டன்னுக்கு 200-250 அமெரிக்க டாலர்கள் வரை குறைந்துள்ளது, ஆனால் சில்லறை சந்தைகளில் இது பிரதிபலிக்க காலதாமதம் ஆகிறது.

சில்லறை விலைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை, நாட்டில் சமையல் எண்ணெய்களின் விலைகளை உன்னிப்பாகக் கண்காணித்து ஆய்வு செய்து வருகிறது.தற்போது சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை வீழ்ச்சி படிப்படியாக உள்நாட்டு சந்தையில் எதிரொலித்து வருவது.

Vignesh

Next Post

சீக்கிரமா வெயிட் லாஸ் பண்ணனுமா..? வெள்ளரிக்காயை இப்படி சாப்பிட்டு பாருங்க..!! சூப்பர் ரிசல்ட்..!!

Fri May 5 , 2023
கோடை காலம் வந்தாலே வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்ளத் தொடங்குவார்கள். ஒரு சிலர் சாலட் வடிவில் சாப்பிடுவார்கள், சிலர் மதிய உணவு அல்லது இரவு உணவில் சாப்பிடுவார்கள். ஆனால், நீங்கள் வெள்ளரியை சரியான முறையில் சாப்பிட்டால், சில நாட்களிலேயே உடல் பருமனை குறைக்கலாம் என்பது தெரியுமா..? வெள்ளரி பல குணங்கள் நிறைந்தது. இதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், கோடையில் உடலில் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. வெள்ளரிக்காய் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுக்கு […]
சீக்கிரமா வெயிட் லாஸ் பண்ணனுமா..? வெள்ளரிக்காயை இப்படி சாப்பிட்டு பாருங்க..!! சூப்பர் ரிசல்ட்..!!

You May Like