மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என உங்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் கவனம் தேவை என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிறைய இடங்களில் ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து இது போல போலி குறுஞ்செய்தி வந்தால் என்ன செய்ய வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி
- பதட்டம் அடைய வேண்டாம்.
- உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்
- அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்
- இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்
- உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும்
- உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்.
இதுபோன்ற போலி குறுஞ்செய்தி யாருக்கேனும் வாந்தால் இந்த விதிமுறைகளை பின்பற்றி ஏமாறாமல் நம்மை காத்துக்கொள்ளலாம். இதுபோன்ற போலி குறுஞ்செய்தி பல வந்துள்ளது என சைபர் க்ரைம் போலீசார் ஏற்கனவே பல எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், தற்போது TANGEDCO போலி குறுஞ்செய்தியை பார்த்து பதற்றம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.