fbpx

விஜயகாந்தின் திருமணநாளுக்கு நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.ஏ. சந்திரசேகர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக விளங்கியவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் வாஞ்சிநாதன் சொக்கத்தங்கம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். சினிமாவில் இருக்கும் போதே அரசியலிலும் களம் பதித்த இவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்தார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

ஆரோக்கியமாக சினிமாவிலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் சில காலமாக தைராய்டு பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தது நாம் அறிந்ததே. இதற்காக வெளிநாடுகளுக்கு சென்றும் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உடல் நலம் நன்றாக தேறி வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.தன்னுடைய 33வது திருமண நாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது .

இந்தப் புகைப்படங்களில் விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் சண்முக பாண்டியன், விஜய் பிரபாகரன் அவரது மனைவி பிரேமலதா மற்றும் மனைவியின் சகோதரர் சதீஷ் ஆகியோருடன் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி உள்ளன. மேலும் பிரபல தமிழ் இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகரும் கேப்டன் விஜயகாந்தை சந்தித்து தனது வாழ்த்துக்களை பரிமாறி இருக்கிறார். விஜயகாந்த் சினிமா வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் அவருக்கு ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரும் மஞ்சள் டீ ரெசிபி.! சிம்பிளாக இப்படி பன்னுங்க.!

Wed Feb 1 , 2023
வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு, உடலின் எதிர்ப்பு சக்திக்கு, இந்த மஞ்சள் டீ அருமருந்தாக அமைந்திருக்கிறது தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன் சீரகத்தூள் – 3 சிட்டிகை, இடித்த இஞ்சி – கால் டீஸ்பூன், பனங்கருப்பட்டி – 1/2 டீ ஸ்பூன் எலுமிச்சைச்சாறு – 1/4 டீ ஸ்பூன் செய்முறை: அடுப்பில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து மஞ்சள் தூள் சிறுவத்தூள் இடித்த இஞ்சி சேர்த்து நன்றாக […]

You May Like