fbpx

தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்சியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட வள்ளியூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்று படுகையிலும், விளாங்காடு பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கீழடி, துலுக்கர்பட்டி உட்பட தமிழகத்தில் எட்டு இடங்களில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அகழாய்வின் போது செஸ் விளையாடும் சூடு மண்ணால் ஆன காய்கள், செம்பினால் ஆன மோதிரம், காதில் அணியும் சூடு மண்ணால் ஆன ஆபரணம், ஈட்டி முனை, பானை, பாசிகள், வேட்டையாட பயன்படுத்தும் கவன் கல், எலும்புகள், பழங்கால கூரைவீடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உட்பட 500க்கு மேற்பட்ட பழங்கால பொருட்கள் வகைகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் 1009 பொருட்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2ஆம் கட்ட பணிகளில் முதலில் தமிழ் எழுத்துகளில் புலி என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பானை ஒடுகளில், திஈய, திச, குவிர(ன்) ஆகிய பொறிப்புகள் கிடைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியானது இரும்பு காலப் புதைவிட பகுதியாகவும், வாழ்விடப் பகுதியாகவும் கருதப்படுவதால் இன்னும் பல அறிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பேசியிருக்கும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்” என்று பெருமையுடன் கூறியுள்ளார்

Maha

Next Post

நடிக்க வரும்போது மட்டும் எங்களது தயவு தேவைப்படுகிறதா..? ஹன்சிகாவை நேரடியாகவே வெளுத்து வாங்கிய பயில்வான்..!!

Wed Jul 5 , 2023
சினிமா நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியதன் மூலம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவரை அழைத்து ஏதாவது ஒரு கான்ட்ரோவசியை உருவாக்கினால் தான் படம் ஹிட் ஆகும் என சமீப காலமாகவே புது புது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவரை வரவழைத்து விடுவார்கள். இவரும் பிரபலங்களிடம் ஏடாகூடமாய் ஏதாவது ஒரு கேள்வி கேட்டு சர்ச்சையை கிளப்பி விடுவார். அந்த வகையில், நடிகை […]

You May Like