fbpx

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு..

விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது..

கடந்த ஜூன் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட நிலையில், இன்னும் பல இடங்களில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் சரிவர வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்தல், விலையில்லா சீருடை விநியோகம், எண்ணும் எழுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கான அங்கீகாரம், கட்டட இடிப்பு, துணைத் தேர்வு, சிறப்பு ஊக்கத்தொகை, இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்டவை குறித்து அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ள தகவல் வெளியானது..

இந்நிலையில் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.. கால தாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அதன்படி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விலையில்லா, சீருடை, புத்தகப் பை உள்ளிட்டவற்றை விநியோகத்தை முடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..

Maha

Next Post

அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை அள்ளிச்சென்ற விவகாரம்..! ஓபிஎஸ் மீது போலீசில் புகார்..!

Tue Jul 12 , 2022
அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் […]

You May Like