fbpx

சினிமாவுக்கு முழுக்கு..!! முழு நேர அரசியலில் களமிறங்கும் நயன்தாரா..? முதலமைச்சரே இவங்கதான்..!! மீண்டும் ஜெயலலிதா ஆட்சி உறுதி..!! பரபரப்பை கிளப்பிய இயக்குனர்

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர், திருமணத்திற்கு பிறகு பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது, தனுஷ் பிரச்சனை என பிரச்சனைகளை சுற்றியே வாழ்ந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் தான், நயன்தாரா குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் பேசியுள்ளார்.

அதில், ”நயன்தாரா பொய் சொல்லி விக்னேஷ் சிவனை திருமணம் செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல. விக்னேஷ் சிவன் ஏற்கனவே ஒரு பெண்ணை லவ் பண்ணிருக்காரு. ஒருவேளை அதையெல்லாம் மனைவி நயன்தாராவிடம் மறைச்சிருக்கலாம். அவரு போடோ போடி படம் எடுத்த சமயத்துல தான் லவ் ஃபெயிலியர் ஆச்சு. அது எனக்கு நல்லா தெரியும். இத பத்தி என்கிட்டயே விக்னேஷ் பேசியிருக்காரு.

நயன்தாராவுக்கு தனக்கு பிடிச்சவங்க மேல பொறாமை ரொம்ப அதிகம். அவங்கள எந்த சூழ்நிலையிலும் தன்னை விட்டு போகக் கூடாதுன்னு நினைப்பாங்க. தனக்கு பிடிச்சவங்களோட 24 மணி நேரமும் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு எதிர்பார்ப்பாங்க. அதனால, அவங்களோட வாழ்க்கையை பகிர்ந்துகிறது ரொம்ப கஷ்டம். எல்லா விஷயத்துலயும் கேள்வி கேப்பாங்க. விக்னேஷ் சிவனோட உண்மையான முகம் தனுஷுக்கு தெரியும். அதனால தான் நயன்தாராவை விக்னஷ் சிவன திருமணம் செய்தது தனுஷுக்கு பிடிக்கல.

ஒரு காலத்துல நயன்தாரா நல்லா இருக்கணும்ன்னு நெனச்சதால தான் சிம்பு கிட்ட இருந்து ரஜினிகாந்த் நயன்தாராவ பிரிச்சாரு. ஒருவேள தனுஷ் பேச்சை நயன்தாரா கேட்டு விக்னேஷ் சிவன கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா சினிமா வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும். அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் அப்புறம் தான். சினிமாவுல அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் ரொம்ப சாதாரணமாக ஆகிப்போச்சு. நயன்தாரா ஜாதகத்தின் அடிப்படையில் அவங்க முதலமைச்சரா வருவாங்க. அவங்க விஜய் கட்சியில எல்லாம் சேர மாட்டாங்க. திமுகவுல இணையுறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு.

அவங்க குடும்ப வாழ்க்கைய துறந்துட்டு அரசியலுக்கு வந்தா அவங்க தான் முதலமைச்சர். அவங்களோட ஆட்சி ஜெயலலிதா ஆட்சி மாதிரி இருக்கும். நயன்தாராவோட ஜாதகத்த நாங்க முதல்ல திருவல்லிக்கேணி முருகேசன் கிட்ட கொடுத்து பாத்தோம். அதுக்கப்புறம் புதுக்கோட்டை கிருஷ்ணகுமாருன்னு பெரிய ஜோதிடர்கிட்ட பாத்தோம். அவங்க எல்லாருமே நயன்தாரா முதலமைச்சர் ஆவாங்கன்னு சொன்னாங்க” என்றார்.

Read More : ”என்னுடைய அம்மா இறக்கவில்லை”..!! மாமியார் தான் இறந்துவிட்டார்..!! விளக்கம் கொடுத்த கமலா காமேஷின் மகள் உமா ரியாஸ்..!!

English Summary

If he leaves his family life and enters politics, he will be the Chief Minister. His rule will be like Jayalalithaa’s rule.

Chella

Next Post

ஐடி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் AI..!! இனி புது ஊழியர்களை வேலைக்கு எடுக்க மாட்டோம்..!! அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட Salesforce..!!

Sat Jan 11 , 2025
Salesforce has announced that its company will not be hiring any software engineers this year.

You May Like