fbpx

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வெளியாக இருக்கும் ஜாக்பாட் அறிவிப்பு..!! பண மழை கொட்டப்போகுது..!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் இந்தாண்டுக்கான 2-வது அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்த அறிவிப்பு இம்மாதத்திற்குள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் அகவலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் வழங்குவதற்கு தமிழக அரசு தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அகவலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் ஆகிய இரண்டு பரிசுகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருவதால், இம்முறை சிறப்பான தீபாவளி பரிசை அளிக்க தமிழ்நாடு அரசு ஆயுத்தமாகி வருகிறது.

அகவலைப்படி, தீபாவளி போனஸ் தொடர்பான அனைத்து வகையான ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒப்புதல் வழங்கிய பின்பு, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். மத்திய அரசு ஊழியர்களை பொறுத்தவரை, அகவலைப்படி தற்போது 50% எட்டியிருக்கிறது. இந்தாண்டு இரண்டாவது அகவலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டால், அது 53% அல்லது 54% ஆக உயரும்.

ஏனென்றால், இந்த முறை 3% அல்லது 4% அகவலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு ரயில்வே துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில், கூடிய விரைவில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பும், அகவலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் கூறப்படுகிறது. இதனால், அரசு ஊழியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Read More : வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.60,000..!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

Diwali bonus notification for Tamilnadu government employees is expected to be released in a few days.

Chella

Next Post

இனி எல்லாம் ஒரே இடத்தில்!. தேசிய நெடுஞ்சாலைகளில் வரப்போகும் புதிய வசதிகள்!. நிதின் கட்கரி மாஸ் அறிவிப்பு!

Wed Oct 9 , 2024
Now everything is in one place! New facilities to come on national highways! Nitin Gadkari Mass Announcement!

You May Like