இந்தியாவில் டி.மாட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்து சாதனைபடைத்துள்ளது.
இந்தியாவில் டி.மாட் அக்கவுண்ட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 22 லட்சத்துக்கும் அதிகமான புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் சேமிப்பு மற்றும் முதலீட்டின் மீதான ஆர்வம் அதிகரித்தது தான். வங்கிகளின் இருப்பு வைத்திருப்பதைக் காட்டிலும் டி.மாட் கணக்குகளில் முதலீடு செய்தலோ , வர்த்தகம் செய்வதன் மூலமாகவோ கூடுதலாக லாபம் கிடைக்கின்றது. இதனால் கடந்த ஓரிரு வருடங்களிலேயே டி.மாட் அக்கவுண்ட்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சரசர சரவென உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல் படி நாட்டின் டி.மேட் அக்கவுண்ட்டுகள் 10 கோடியை தொட்டுள்ளதாம் . கோவிட் தொற்று பரவுவதற்கு முன்பு டி.மேட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 4.9 கோடியாக மட்டுமே இருந்தது. பின்னர் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்ய தொடங்கிவிட்டனர். பெரும்பாலான ஐ.டி. ஊழியர்கள் தங்கள் வருமானத்தை இதன் மூலம் சேமித்து வைக்க வேண்டும் என நினைத்தனர். இதைப் பற்றிய விழிப்புணர்வு இந்தக் காலக்கட்டங்களில் காட்டுத் தீயைப் போல பரவியது. மேலும் முற்காலத்தை போல் இல்லாம் தற்போது தங்கள் தொலைபேசியிலேயே எளிமையான முறையில் டி.மேட் கணக்குகள் தொடங்கிக் கொள்ள முடியும். ஓரிரு தினங்களிலேயே உங்கள் வர்த்தகத்தை எளிமையாக தொடங்கிவிடலாம். எனவே இதுவும் ஒரு கூடுதல் வசதியாக ஆனது. இதுதான் இந்த சாதனை படைக்க காரணமாக உள்ளது என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது ஒரு மைல்கல் என என்.டி.எஸ்.எல் மற்றும் சி.டி.எஸ்.எல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.