சென்னையில் மொத்தம் 3 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று தான் வடசென்னை. இந்த தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி இருக்கிறார். மீண்டும் கலாநிதி வீராசாமி திமுக சார்பில் களமிறங்கி உள்ளார். அதேபோல் அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால்கனகராஜ், நாம் தமிழர் சார்பில் அமுதினி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில், திமுக வேட்பாளரான ஆற்காடு வீரசாமியின் மகன் கலாநிதி வீராசாமி 1,51,261 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக சார்பில் ராயபுரம் மனோ 47,571 வாக்குகளும், அவரைத் தொடர்ந்து பாஜக சார்பில் பால் கனகராஜ் 41,017 வாக்குகளும், நாம் தமிழர் சார்பில் அமுதினி 31,657 வாக்குகளும் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக வட சென்னை வேட்பாளர், கலாநிதி வீராசாமி தனது வெற்றியை உறுதி செய்தார். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
Read More : Seeman | அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுக்கிறது நாம் தமிழர் கட்சி..!!