திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதிக்குள் அளிக்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் பெறுவதற்கான தேதியை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப படிவங்களை பிப்ரவரி 19ஆம் தேதி முதல், சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.50,000 எனவும், அதற்காக ரூ.2,000 செலுத்தி விண்ணப்ப படிவத்தை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் செலுத்த வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.