தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் மோடி, தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவர் அடிக்கடி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கிறார். அந்த வகையில் இன்று மீண்டும் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக உடன் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மோடி பிரச்சார மேடைக்கு வந்த உடனேயே, பாஜக தொண்டர்கள் மோடி, மோடி என உற்சாகமாக குரல் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரியில் இருந்து அலை கிளம்பியுள்ளது. இந்த அலை நீண்ட தூரம் பயணம் பயணிக்கப்போகிறது. 1991ல் கன்னியாகுமரி இருந்து காஷ்மீர் வரை யாத்திரை சென்றேன்.
இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறேன். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம். இந்தியா கூட்டணி வரலாறு மோசடியும் ஊழல்களும் கொண்டது. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் ஒற்றை இலக்கு. 2 ஜி ஊழலில் பெரும் பங்கு வகித்தது திமுகதான்” என்று கடுமையாக சாடினார்.
Read More : Lok Sabha | நாளை முதல் எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியாது..!! உடனே அமலுக்கு வரும் தேர்தல் விதிகள்..!!