தமிழக ஆளுநரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
சமிபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவிக்கு எதிராக அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் விடுத்தார். மேலும் ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய போது பேப்பரில் எழுதி கொடுத்த படி படித்திருந்தால் அவர் காலில் பூப்போட்டு அனுப்பியிருப்போம்.
ஆனால், தமிழகத்தில் இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக் கொடுத்த எங்கள் முப்பாட்டன் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் ஆளுநரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உள்ளது என பல கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ராஜ்பவன் துணை செயலாளர் பிரசன்ன ராமசாமி சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டிருப்பதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.
