நடிகர் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு, வில்லன் நடிகர் பாபூஸ் அளித்துள்ள பேட்டியில், ”ஒரு புரொடக்ஷன் மேனேஜர் கமிஷன் வாங்குவான் என உலகம் சொல்லும். ஆனால், நான் அப்படி கிடையாது. சினிமாவில் பாபூஸ் பீக்கில் இருந்த சமயத்தில் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.
சினிமாவில் நடிக்க ஒரு பெண்ணை அழைத்து வரும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அடுத்தவன் காசில் வெளிநாடு எல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும் என ஆசை. அதற்காக அவர்களுடைய பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்கின்றனர். நடிக்க வரும் பெண்கள் கெட்டுப் போவதற்கு காரணம் நடிகர்களோ, இயக்குனர்களோ, தயாரிப்பாளரோ காரணம் அல்ல. நடிகைகளின் பெற்றோரும், உடன் இருப்பவர்களும் தான் காரணம்.
தன் உறவுகளை சந்தோஷமாக வாழ வைக்க பெண்கள் கெட்டுப் போகின்றனர். என்னிடமே வந்து என் பொண்ணை என்ன வேணும்னாலும் பண்ணுங்க. ஆனா, நடிகை ஆக்கிடுங்கன்னு எத்தனையோ பேர் சொல்லிருக்காங்க. இங்க கெட்டுப்போக தயாராகவே பெண்கள் வந்துவிட்டு அடுத்தவர்களை குறை சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை. சினிமா ஒரு சுடுகாடு. அதை தெரிந்தே ஏன் நடிக்க வருகிறீர்கள்” என்ற் தெரிவித்துள்ளார்.