துருக்கி மற்றும் சிரியா எல்லையில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.. 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதை தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4300 ஆக உயர்ந்துள்ளது.. இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. நேற்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மாலையில் 7.6, 6.0 என்ற அளவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.. இதனால் உலகின் மோசமான நிலநடுக்கமாக இது மாறி உள்ளது..

2000 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட உலகின் மிக மோசமான நிலநடுக்கங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்..
- ஜூன் 22, 2022: ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- ஆகஸ்ட் 14, 2021: ஹைட்டியில், 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,200க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
- செப்டம்பர் 28, 2018: இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 4,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- ஆகஸ்ட் 24, 2016: மத்திய இத்தாலியில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- ஏப்ரல் 25, 2015: நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- ஆகஸ்ட் 3, 2014: சீனாவின் வென்பிங் அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதில், 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- செப்டம்பர் 24, 2013: தென்மேற்கு பாகிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- மார்ச் 11, 2011: ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுனாமியைத் தூண்டியது.. இதில் 20,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- பிப்ரவரி 27, 2010: சிலியில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமியை உருவாக்கியது.. இதில் 524 பேர் பலியானர்கள்.
- ஜனவரி 12, 2010: ஹைட்டியில், அரசாங்க மதிப்பீடுகளின்படி, 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 316,000 பேர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 30, 2009: இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- ஏப்ரல் 6, 2009: 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இத்தாலியின் எல்’அகிலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
- மே 12, 2008: சீனாவின் கிழக்கு சிச்சுவானில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதன் விளைவாக 87,500 பேர் இறந்தனர்.
- ஆகஸ்ட் 15, 2007: மத்திய பெருவின் கடற்கரைக்கு அருகே 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- மே 26, 2006: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- அக்டோபர் 8, 2005: பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 80,000 பேர் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 28, 2005: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 8.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 26, 2004: இந்தோனேசியாவில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் சுனாமியைத் தூண்டியது.. இதனால் நாடுகளில் 230,000 பேர் உயிரிழந்தனர்.
- டிசம்பர் 26, 2003: தென்கிழக்கு ஈரானில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதன் விளைவாக 50,000 பேர் உயிரிழந்தனர்.
- மே 21, 2003: அல்ஜீரியாவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்..
- மார்ச் 25, 2002: வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்.
- ஜனவரி 26, 2001: இந்தியாவில் குஜராத்தில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதில் 20,000 பேர் உயிரிழந்தனர்.