தலைவலி, கை, கால் வலி என எது வந்தாலும் வலிநிவாரணி மாத்திரைகளை (Pain Killer) சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. வலி நிவாரணிகளை மருந்தை எப்போதாவது சாப்பிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் நீங்கள் அதை வழக்கமாக்கினால், அது உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே வலி நிவாரணிகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது.
அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் நேரமின்மை காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர். அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்து கிடைக்கும் பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ள ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. இந்த வகை உணவுகளில் அதிக அளவு உப்பு அதாவது சோடியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இரத்தத்தில் அதிக அளவு உப்பு இருந்தால், அது உடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சத் தொடங்குகிறது. இது இரத்த நாளங்களை பாதிக்கிறது. எனவே, முடிந்தவரை சுத்தமான வீட்டில் சமைத்த உணவையே உட்கொள்ளுங்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் 7-8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால், உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். இது இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இதயத் தடுப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தூக்கமின்மை பிரச்சனையை அலட்சியப்படுத்தாதீர்கள். உடலில் வைட்டமின் டி இல்லாததால் எலும்புகள் வலுவிழந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், வைட்டமின் டி குறைபாடு உயர் இரத்த அழுத்த அபாயத்தையும் அதிகரிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
எனவே, உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்கவும், இன்றிலிருந்தே வைட்டமின் டி நிறைந்த உணவை உட்கொள்ளத் தொடங்குங்கள். மன அழுத்தம் உங்களுக்கு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே மன அழுத்தத்திலிருந்து உங்களை விலக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதிக மன அழுத்தம் உங்கள் இரத்த நாளங்களையும் சேதப்படுத்தும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, சமூக நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்துவது மிகவும் அவசியம்.