fbpx

இந்த செயலி யூஸ் பண்றீங்களா..? உங்களை தனியாக அழைத்துச் சென்று இதெல்லாம் பண்ணுவாங்க..!! காவல்துறை எச்சரிக்கை..!!

தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அதன் மூலம் நடக்கும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கிரைண்டர் (Grindr) என்பது ஒரு டேட்டிங் செயலியாகும். இந்த செயலியின் மூலம் பயனர் ஒரு துணையைத் தேடிக்கொள்ள முடியும். இந்த செயலி ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக உள்ளது. பல நாடுகளில் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செயலியைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் குற்றங்கள் நிகழ்ந்து வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், சமூக வலைதளம் மற்றும் இதற்கென உள்ள கிரைண்டர் செயலிகளில் ஓரினச்சேர்க்கை மற்றும் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவார்கள். பின்னர், இரவு நேரங்களில் தங்களைத் தனிமையில் சந்திப்பதாகக் கூறி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்வார்கள்.

அங்கு உங்களை மிரட்டி பணம் மற்றும் உடைமைகளைப் பறித்துச் சென்றுவிடுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். கிரைண்டர் செயலி மற்றும் அதைப் போன்று வேறு செயலிகளைப் பயன்படுத்தி மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் குறித்து ஹலோ போலீஸ உதவி எண் 83000 – 31100 அல்லது 100-க்கு தொடர்பு கொண்டு உடனே புகாரளிக்கலாம்.

Read More : இதை செய்வதால் தான் ஆண்களின் கையில் பணம் தங்கவே மாட்டீங்குதா..? இனியும் இந்த தவறை செய்யாதீங்க..!!

English Summary

While this app has been banned in many countries, police are warning that crimes are being committed in Tamil Nadu using this app.

Chella

Next Post

ஒருவாரத்திற்கு தேவையான உணவுகளைப் பொருட்களை ரெடியா வெச்சிக்கோங்க..!! அறிவிப்பு வந்ததும் உடனே செல்லுங்கள்..!! வெளியான எச்சரிக்கை..!!

Sat Nov 30 , 2024
The Tamil Nadu State Disaster Management Authority has issued safety measures to be taken before the storm.

You May Like