fbpx

கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட நினைக்கிறீர்களா..? அப்படினா கண்டிப்பா இதை பண்ணுங்க..!!

கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடுவது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு மன உறுதி, யுக்தி மற்றும் பொறுமை மிகவும் அவசியம். ஒருவேளை உங்களது கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

முதலில் நீங்கள் உங்களது பழக்கங்களுக்கு ஒரு டிடெக்டிவ் போல மாற வேண்டும். அந்த பழக்கத்திற்கான தூண்டுதல்கள் என்ன மற்றும் அதில் இருந்து உங்களுக்கு கிடைக்கக்கூடிய சன்மானம் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மர்மத்தை நீங்கள் கண்டுபிடித்து விட்டால், அதற்கான மாற்று வழியை எளிதாக கூறிவிடலாம். ஒருவேளை மன அழுத்தம் காரணமாக நீங்கள் புகை பிடிக்கிறீர்கள் என்றால் தியானம், உடற்பயிற்சி அல்லது மனதிற்கு பிடித்தவர்களுடன் பேசுவது போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

நீங்கள் ஒன்றும் திரைப்படங்களில் வரக்கூடிய சூப்பர் மேன் அல்லது வொண்டர் வுமன் கிடையாது. நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள். எனவே எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மாற்ற முடியாது. யதார்த்தமான, குறிப்பிட்ட இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு நேரத்தில் ஒரு கெட்ட பழக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தி, அதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய சவால்களை எப்படி மேற்கொள்வது என்பதற்கு திட்டமிடுங்கள்.

ஏதேனும் ஒரு டைரி, அப்ளிகேஷன் அல்லது காலண்டர் போன்றவற்றை பின்பற்ற தொடங்குங்கள். எப்போது மற்றும் எவ்வளவு மணி நேரத்திற்கு ஒருமுறை கெட்ட பழக்கத்திற்கு ஆளாகிறீர்கள் என்பதை குறித்து வையுங்கள். அந்த பழக்கத்தில் ஈடுபடுவதற்கு முன்பும் பின்னரும் உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை எழுதுங்கள். வெற்றிக்கான உங்கள் பயணத்தை நிச்சயமாக நீங்கள் எழுத்துப்பூர்வமாக வைத்திருப்பதற்கு தகுதி பெற்றது.

உண்மையாகவே உங்கள் மீது அக்கறை கொண்டுள்ள உங்கள் நண்பர் அல்லது குடும்பத்தில் ஒருவரின் உதவியுடன் இந்த கெட்ட பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான வழிகாட்டுதலை வழங்குதல், உங்களை ஊக்குவித்தல் மற்றும் தேவைப்படும் நேரத்தில் உங்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்ளுதல் போன்றவற்றை நிச்சயமாக அவர்கள் செய்வார்கள். ஒரு கெட்ட பழக்கத்தை உடைப்பது என்பது மாரத்தான் பந்தயம் போன்றது. எனவே, நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.

அவ்வப்போது உங்களை நீங்கள் மன்னிக்கவும் வேண்டும். உங்கள் வெற்றி கதையில் பல்வேறு விதமான திருப்பங்கள் நடைபெறும். தடுமாற்றங்களில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், யுக்திகளை மாற்றி அமையுங்கள், தொடர்ந்து முன்னோக்கி செல்லுங்கள். இந்த பயணத்தை எதற்காக ஆரம்பித்தீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். கடந்து வந்த தூரத்தை நினைத்து கொண்டாடுங்கள்.

Chella

Next Post

மக்களே..!! உங்கள் ஆதார் எண் பத்திரமா இருக்க..? உடனே இதை பண்ணுங்க..!!

Mon Feb 12 , 2024
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் என்ற 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணானது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அடையாள உறுதிப்படுத்தலுக்கு உதவுகிறது. அரசு சேவைகள், வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பல போன்றவற்றிற்கு இந்த தனித்துவமான அடையாள எண் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் எண் ஒருவரது வங்கிக் கணக்கு, பான் கார்டு, மின்சார சேவை போன்றவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இன்று ஆதாரை வைத்து பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று […]

You May Like