தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள பல் மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டு அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை தொடர்ந்து, அந்த மருத்துவமனை மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில் பல் அறுவை சிகிச்சை செய்த ஒரு நபர் இறந்த நிலையில், மற்றொரு பெண்ணின் உதடு வெட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பெண்ணின் உதடு வெட்டப்பட்டதாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு புகார் எழுந்தது. இந்நிலையில் இங்கே வழக்கமான சிகிச்சைக்கு வந்த 28 வயது இளைஞர் ஒருவர் அறுவை சிகிச்சைகளின் போது மரணம் அடைந்த சம்பவம் ,மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நபருக்கு குறிப்பிட்ட அளவைவிட அதிகமான அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் அவர் மரணம் அடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
ஐதராபாத்தில் ஆடம்பரமான ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், தற்போது நடைபெற்று இருக்கும் கொடூர சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே பெண் ஒருவரின் உதடுகள் தற்செயலாக வெட்டப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பகிர்ந்திருக்கிறார். மேலும் தனது தோழி அந்த மருத்துவமனைக்கு கடந்த ஒரு வருடமாக சென்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனது தோழிக்கு நேர்ந்த கொடுமை பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் சௌமியா சங்கம் என்ற பெண் “கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள எஃப்எம்எஸ் பல் மருத்துவமனையில் அதிக அளவு மயக்கம் மருந்து கொடுக்கப்பட்டதால் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எனது தோழியும், அவர்களது தவறான சிகிச்சையால் ஒரு வருடமாக கஷ்டப்பட்டு வருகிறார். அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் எல்லாம் அவரது உதட்டை தவறுதலாக ஒரு பகுதியை வெட்டிவிட்டனர்.
எனது தோழி கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்தால் அவதிப்படுவதோடு சிரிக்க முடியாமலும் வாயை முழுவதுமாக திறக்க முடியாமலும் கஷ்டப்பட்டு வருகிறார். மேலும் ஒரு வருடத்திற்கும் அதிகமாக ஸ்டிராய்டு மருந்துகளை உபயோகித்து வருகிறார் என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மருத்துவமனை குறித்து கூகுளில் எதிர்மறையான கருத்துக் கணிப்பை தெரிவித்ததை தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு நடந்த அவலம் வெளியே தெரிந்திருக்கிறது.
இதன் பிறகு மருத்துவமனைக்குச் செல்லும் போது அங்கு இருக்கும் மருத்துவர்கள் தனது மக்களை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் அந்த தாய் குற்றம் சாட்டி இருக்கிறார். வெட்டப்பட்ட உதடுகளுடன் தான் உனது முகம் அழகாக இருக்கிறது எனக் கூறி மருத்துவர்கள் எனது மகளை பரிகாசம் செய்வதாக தெரிவித்திருக்கிறார். மேலும் மருத்துவமனை குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்ததால் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி தனது மகளுக்கு சூடு வைத்ததாகவும் அந்த தாய் தெரிவித்துள்ளார்.
English Summary: There are several shocking incidents happened at hyderabad dental hospital. A 28 year old man was dead due to over dose of anaesthesia and a woman’s lip chopped off.