fbpx

உங்கள் தூக்கம் 9 மணி நேரத்தை தாண்டுகிறதா..? என்னென்ன பக்க விளைவுகள் வரும் தெரியுமா..? இனியும் இந்த தவறை பண்ணாதீங்க..!!

ஒவ்வொரு தனிநபரின் தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாத ஓர் அங்கம் தூக்கம். உடல் ஓய்வு பெறவும், ஹார்மோன்கள் சமநிலையடையவும் தினசரி குறைந்தது 6 மணிநேரமாவது தூங்குவது அவசியம். இருப்பினும் தேவையான தூக்கம் என்பது தனிநபர் மற்றும் வயதை பொருத்து மாறுபடுகிறது.

நிறைய பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலும், சிலர் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர். என்றாவது ஒரு நாள் அதிகநேரம் தூங்குவது உடலுக்கு நல்லது என்றாலும், தினமும் அப்படி தூங்குவது உடலுக்கு பல வழிகளில் தீமைகளையே ஏற்படுத்தும். ஒரு தனிநபர் அதிக நேரம் தூங்கினால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்வது அவசியமாகிறது.

அதிக தூக்கத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள் :

அதிகநேரம் தூங்குவது தலைவலிக்கு வழிவகுக்கிறது. தினசரி தூங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தூங்குவதால் நியூரோட்ரன்ஸ்மிட்டர்ஸில் தாக்கங்களை ஏற்படுத்தி தலைவலிக்கு வழிவகுக்கிறது. அதேபோல் பகலில் அதிகநேரம் தூங்குவது இரவுநேர தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுவும் தலைவலிக்கு காரணமாகிறது. அதிக நேரம் தூங்குவது உடற்பருமனுக்கு வழிவகுக்கிறது. ஒருநாளில் 7-8 மணிநேரத்துக்கும் அதிகமாக தூங்குவது உடல் எடை அதிகரிப்பை தூண்டுகிறது. அதேபோல் தேவைக்கு குறைவாக தூங்குவதும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பதை மறக்க வேண்டாம். எனவே தினசரி உடலுக்கு தேவையான தூக்கத்தை கொடுப்பது அவசியம்.

தேவைக்கு அதிகமாக தூங்குவது டைப் 2 டயாபட்டிஸுக்கு வழிவகுக்கும். உடற்பருமன் அதிகமாக இருப்பவர்கள் அதிக நேரம் தூங்கினால் அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே தினசரி தூங்கும் நேரத்தில் கருத்தில்கொள்வது அவசியம். அதிக நேரம் தூங்குவது இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. உடலின் தேவைக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதயநோய்கள் மற்றும் அதீத தூக்கம் இரண்டிற்கும் இடையே நேரடி தொடர்பு இல்லையென்றாலும், தினசரி 7-8 மணிநேரம் தூங்குபவர்களைவிட 11 மணிநேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தத்தால் அவதிப்படும் பெரும்பாலானவர்களுக்கு இன்சோம்னியா என்கிற தூக்கமின்மை பிரச்சனை இருந்தாலும், குறிப்பிட்ட சிலர் அதிக நேரம் தூங்குகின்றனர். அதிக நேரம் தூங்குவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதால் தினசரி தூக்க அளவை கவனத்தில் கொள்ளவேண்டும். வேண்டுமானால் மருத்துவரை அணுகி தூக்க நேரத்தை குறைப்பதற்கான வழிகளை கேட்டறியலாம்.

Read More : வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்..!! சிக்கன், முட்டை சாப்பிடலாமா..? மனிதர்களுக்கு எப்படி பரவுகிறது..? மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

English Summary

Sleeping too much during the day can affect your sleep at night, which can also cause headaches.

Chella

Next Post

வெற்று விளம்பர திட்ட அறிவிப்பு செய்து காலத்தை கடத்தி வரும் திமுக அரசு...! அமைச்சர் எல்.முருகன் கடும் விமர்சனம்...!

Sat Feb 15 , 2025
DMK government is wasting time by announcing empty advertising schemes

You May Like