fbpx

அரசியல் சண்டையில் என்னை இழுக்காதீர்!. அமைச்சரை அலறவிட்ட சமந்தா!. விவாகரத்து கருத்துக்கு கண்டனம்!

Samantha: விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை சமந்தா, உங்களின் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், கே.டி.ராமராவால், சமந்தாவைப் போல பல பெண்கள் திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டே சென்று விட்டதாகவும் குண்டை தூக்கிப் போட்டார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் மாமனாருமான நாகார்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தன் மீது அவதூறு கருத்து பரப்பும் விதமாக, அமைச்சர் சுரேகா கருத்து தெரிவித்திருப்பதாகவும், அதனை உடனே திரும்பப் பெறவில்லை என்றால், சட்டப்படி வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகை சமந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்,திரைத்துறையில் பல சிரமங்களை கடந்து ஒரு பெண்ணாக போராடிக் கொண்டிருக்கிறேன். அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய விவாகரத்து பரஸ்பரமானது. தயவு செய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெற வேண்டும். உங்களின் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டே இருக்கிறேன். அப்படியே இருக்கவே நான் ஆசைப்படுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Readmore: கர்ப்பிணிகளே!. நவராத்திரி விழாவில் கட்டாயம் இதை பின்பற்றுங்கள்!

English Summary

Don’t drag me into a political fight! Samantha screamed at the minister! Condemnation of divorce!

Kokila

Next Post

ஷாக்!. தமிழகத்தில் திடீரென அதிகரிக்கும் காய்ச்சல்!. தினமும் 5,000 பேருக்கு சிகிச்சை!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Thu Oct 3 , 2024
Shock!. Dengue and blue fever will increase in Tamil Nadu! Treating 5,000 people daily!

You May Like