பொதுவாக ஒரு மனிதனின் ஆரோக்கியம் அவர் கலையில் சாப்பிடும் உணவை பொருத்தது. ஆனால், நமது தமிழ்நாட்டை பொறுத்த வரை காலியில் எப்போதும் இட்லி, தோசை, உப்மா என்று தான் இருக்கும். சீக்கிரம் வேலை முடிந்தால் சரி என்று பல நேரங்களில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை காலையில் சாப்பிட்டு விடுகிறோம். அந்த வகையில், ஒரு சில உணவுகளை காலையில் சாப்பிடவே கூடாது. அப்படி நாம் சாப்பிடும் பொது, அது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆம், எந்த உணவுகளை காலையில் சாப்பிட கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
பழங்கள் சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் ஒரு சில பழங்களை நாம் காலையில் சாப்பிடுவது நல்லதல்ல. குறிப்பாக சிட்ரஸ் பழங்களை காலியில் சாப்பிடவே கூடாது. ஏனென்றால், சிட்ரஸ் பலத்தில் உள்ள அமில தன்மை, வாயு பிரச்சனையை அதிகரித்து விடும். மேலும், சிட்ரஸ் பழங்களால் அனாபிலாக்ஸிஸை (ஒவ்வாமை) ஏற்படுத்துவதோடு, தோல், வாய் மற்றும் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
காலை உணவாக தயிர் சாப்பிடும் போது, சளி பிரச்சனைகள் ஏற்படும். இதில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி12 ஏராளமாக உள்ளதால், தயிரை மதிய உணவில் சாப்பிடுவது மிகவும் நல்லது. தற்போது உள்ள காலகட்டத்தில், நாகரீகம் என்ற பெயரில் பலர் காலை உணவாக பிரட் சாப்பிடுகின்றனர், ஆனால் பிரட்டில் உள்ள அமிலோபெக்டின் ஏ, இது சர்க்கரை அளவை அதிகரித்து விடும், இதனால் சர்க்கரை நோய், சிறுநீரகக் கற்கள், இதய நோய், கொலஸ்ட்ரால் ஏற்படும்.
ஆரோக்கியம் என்று நினைத்து, சிலர் காலையில் வாழைப்பழம் சாப்பிடுகின்றனர். வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது இரத்தத்தில் மெக்னீசியத்தின் அளவை அதிகரித்துவிடுகிறது. இது இதயத்திற்கு நல்லது இல்லை. பிற்காலத்தில் இது ஆபத்தை ஏற்படுத்தும்.