fbpx

குடையை மறந்துறாதீங்க..!! இன்னும் கொஞ்சம் நேரம்தான் இருக்கு..!! இந்த 9 மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 28ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டிற்கும் வந்துருச்சு..!! முகக்கவசம் கட்டாயம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!!

Mon Dec 25 , 2023
இந்தியாவில் கொரோனா 3 அலைகளை தாண்டி தற்போது மீண்டும் அதி வேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. அதாவது, தற்போது ஒமைக்ரானின் துணை வேரியண்ட் வகை கொரோனா அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மற்ற கொரோனா வைரஸ்களை போல சாதாரணமாக இருக்கும் என்று மக்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், […]

You May Like