காலையில் உணவை தவிர்ப்பதால், பின்னாளில் பெரும் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் பலர் கூறியும் பலர் தங்கள் உடல் நலன் நன்றாக இருக்கும் வரை இது குறித்து கவலையே படுவதில்லை. ஆனால், மொத்தமாக சேர்த்து வைத்து இது உடலில் உபாதையை ஏற்படுத்தும் போது, அந்த உடல் வலியை தாங்கிக்கொள்வது அவர்கள்தான். எனவே, காலையில் ஏன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பது குறித்தும், அப்படி சாப்பிடாமல் போனால் என்ன நேரும் என்பது குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இரவு முழுவதும் தூங்கிய பிறகு உங்கள் உடலும் மனதும் கண்டிப்பாக தொய்வில்லாமல் ஆற்றலுடன் உணர வேண்டியது அவசியம். எனவே, காலையில் எழுந்தவுடன் சாப்பிடுவது உங்கள் உடலில் க்ளூகோஸ் அளவை அதிகரிக்க உதவும். இதனால், உங்கள் மூளையும் உடலும் நல்ல ஆற்றல் பெறும். காலையில் சாப்பிடாமல் இருந்தால், உடலும் மூளையும் சுறுசுறுப்பின்றி மந்தமாக செயல்படும். இதனால் நாம் செய்யும் வேலைகள் அல்லது படிக்கும் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
நீங்கள் சாப்பிடும் உணவு உங்களுக்கு ஆற்றல் அளிக்கும் போது, இதற்கு பின்னால் மெட்டபாலிச சத்து அதிகரிக்கும் செயல்முறையும் நடைபெறும். காலையில் சிற்றுண்டியை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அன்றைய நாளை எதிர்கொள்வதற்கான மெட்டபாலிச சத்து, உங்கள் உடலில் குறைந்து காணப்படும். இதனால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களால் அது முடியாமல் பாேகலாம்.
உங்கள் ரத்த அளவில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கண்டிப்பாக, காலை சிற்றுண்டியை தவிர்க்க கூடாது. சுகர் லெவல் அதிகரித்தால், திடீர் மயக்கம், அதிகமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றுதல் போன்ற மாறுதல்கள் ஏற்படும். எனவே, சர்க்கரை நோய் இருப்பவர்கள், கண்டிப்பாக காலை உணவை தவிர்க்கவே கூடாது. காலை உணவை சரிவர, சரியான அளவில் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்ள உதவும் ஒரு சிறந்த வழி, காலை உணவை ஸ்கிப் செய்யாமல் இருப்பதாகும். சரியாக டயட் இருந்து, உடலை பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக காலை சிற்றுண்டியை தவிர்க்கவே கூடாது. காய்கறிகள், மொத்த தானியங்கள் மற்றும் மெல்லிய புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லதாகும்.
காலை உணவை சரிவர எடுத்துக்கொள்வதால், கண்டிப்பாக நம் உடல் எடையை சரியாக கட்டுக்கோப்பில் வைத்துக்கொள்ளலாம். காலை உணவை தவிர்ப்பவர்கள் பெரும்பாலும் கூடிய எடையுடனும், தொப்பையுடனும் இருப்பதாகவும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. எனவே, இனி காலையில் சாப்பிடுவதை மறவாதீர்கள்.
Read More : நீண்ட நேரம் ஏசியில் இருப்பவரா நீங்கள்..? அப்படினா இந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு வரும்..!! உஷார்..!!