தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை வாட்ஸ்அப் சேனல் (WhatsApp Channel) மூலம் அணுக அனுமதிக்கும் புதிய சேவையை தற்போது தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகள் பொதுமக்களுக்காக சேவை செய்ய இயங்கி வருகிறது.
ஒவ்வொரு துறைக்கும் பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பல சிறப்பு நலத்திட்டங்களை (special welfare schemes) கூட தமிழக அரசு பொதுமக்களின் நலனுக்காக வழங்கி வருகிறது. இப்படி ஒவ்வொரு துறைக்கும் திட்டங்கள், நலத்திட்டங்கள், சிறப்பு திட்டங்கள் என்று பல திட்டங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசுடன் தொடர்புடைய ஒவ்வொரு துறைக்கும் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க, தனித்தனி சமூக வலைத்தள பக்கங்களை அந்தந்த துறைகள் நிர்வகித்து வருகின்றன. ஒவ்வொரு துறைக்கும் தொடர்புடைய தகவல்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், சில நேரங்களில் பல துறைகள் சார்ந்த முக்கியமான தகவல்களை மக்கள் தவறவிட்டுவிடுகிறார்கள்.
இந்த சிக்கலுக்கு தீர்வாக, தற்போது தமிழ்நாடு அரசு பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ்அப் தளத்தில் (WhatsApp platform) ஒரு சூப்பரான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், இனி அரசின் திட்டங்கள் (Tamil Nadu government plans) மற்றும் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை இனி நீங்கள் ‘வாட்ஸ்அப்’ மூலம் தெரிந்து கொள்ளலாம். தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகள் மற்றும் தகவல்களை பொதுமக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த தற்போது புதிய வாட்ஸ்அப் சேனலை (New TN Govt. WhatsApp Channel) தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேனலில் பொதுமக்கள் எப்படி சேரலாம்..?
இனி தமிழக அரசுடன் தொடர்பில் உள்ள துறைகளில் இருந்து வெளியிடப்படும் முக்கியமான தகவல்கள் இனி ”TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற வாட்ஸ்அப் சேனல் மூலம் பொதுமக்கள் பார்க்கலாம். பொதுமக்கள் இனி நேரடியாக உங்கள் ஸ்மார்ட்போன் (smartphone) மற்றும் மொபைல் (mobile) சாதனம் வழியாக இனி தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். https://whatsapp.com/channel/0029VaaD7yW9Bb62oAgneJ0T என்ற லிங்கை கிளிக் செய்து தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் சேனலில் நீங்கள் சுலபமாக இணைந்து கொள்ளலாம்.
Read More : குவைத் தீவிபத்து..!! தமிழர்களின் நிலை என்ன..? 5 பேர் பலி..? அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!!