fbpx

‘எவ்வளவு சொல்லியும் கேட்கல’..!! கள்ளக்காதலியுடன் அடிக்கடி உல்லாசம்..!! மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

கணவரின் கள்ளக்காதலால் 30 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் பகுதியைச் சேர்ந்தவர் நம்பிராஜன் (30). இவர், சொந்தமாக அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரும், நவீனா (30) என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில், நம்பிராஜனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேறு அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நவீனாவுக்கு நண்பர் ஒருவர் மூலம் தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நவீனா, இதுகுறித்து கணவர் நம்பிராஜனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த பெண்ணுடன் நம்பிராஜன் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி, சம்பந்தப்பட்ட பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கணவரை பிரிந்து வாழ நவீனா முடிவு செய்திருக்கிறார். பின்னர், குடும்பத்தினர் நவீனாவை சமாதானப்படுத்தி, ஒன்றாக வாழ அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், கணவருக்கு வேறு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் மனமுடைந்த நவீனா, இரவு வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், நவீனாவின் தாய் பிரமலா, தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக காசிமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக ஆர்டிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Read More : Flipkart நிறுவனத்தில் வேலை..!! இந்த கல்வித் தகுதி இருந்தாலே போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

When a 30-year-old woman hanged herself due to her husband’s cheating, the police arrested her husband and put him in jail.

Chella

Next Post

பகலில் பிச்சை எடுத்தல்.. இரவில் சொகுசு ஹோட்டலில் ஒய்வு..!! - சிக்கிய ராஜஸ்தான் கும்பல்

Fri Oct 4 , 2024
Daytime begging, nighttime hotel stays: Rajasthan's beggar gang busted in Indore

You May Like