பொதுவாக கோவிலுக்கு செல்லும் போது கருப்பு நிறத்தை தவிர்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் தான் சாத்தப்படும். தெய்வங்களில் சனி பகவானை மட்டுமே நேருக்கு நேர் பார்த்து வணங்கக் கூடாது. சனீஸ்வரன் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது, விழுந்து வணங்கக் கூடாது என்பது போன்ற பலவிதமான விதிமுறைகள் சொல்லப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என இங்கு தெரிந்த கொள்ளலாம்.
சனீஸ்வரனை வழிபடும் முறை : மற்ற தெய்வங்களின் பார்வை நம்மீது பட வேண்டும் என பிரார்த்தனை செய்வோம். ஆனால் சனி பகவானின் பார்வை மட்டும் நம் மீது பட்டு விடக் கூடாது என்பார்கள். சனிக்கிழமைதோறும் நவகிரகங்களையும், சனி பகவானையும் சுற்றும் பழக்கம் உள்ளவர்கள், சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் சன்னதிகளின் இரு பக்கங்களில் நின்று வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வையால் நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. ஏழரை சனி, பாதச் சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி நடைபெறும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சனிபகவானை 27 முறை சுற்றி வந்து, எள் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் சனிபகவானின் தாக்கம் குறைந்து ஆபத்துகள் விலகும் என்பது ஐதீகம். அதோடு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாலும் சனி பகவானின் மனம் குளிர்ந்து, அவரின் அருள் நமக்கு கிடைக்கும்.
சனி பகவானை வழிபடும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் :
* நீங்கள் சனி பகவானை வணங்கும் போதெல்லாம், அவருடைய கண்களை ஒருபோதும் பார்க்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வழிபாட்டின் போது சனிதேவரின் பாதங்களை நோக்கிப் பார்க்க வேண்டும். பூஜையின் போது அவர்களின் கண்களைப் பார்த்தால், அது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
* சனி தெய்வ வழிபாட்டின் போது மேற்கு நோக்கி வணங்க வேண்டும். பூஜையின் போது திசையை மனதில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
* சனி பகவானை வழிபடும் போது, எப்போதும் அவருக்கு பிடித்தமான நீலம் மற்றும் கருப்பு ஆடைகளை அணிந்து வணங்குங்கள். சிவப்பு நிற ஆடைகளை அணிந்து வணங்காதீர்கள்.
* நீங்கள் எந்த சனி கோவிலுக்குச் செல்கிறீர்கள் என்றால், ஒருபோதும் சனி பகவானிடம் உங்கள் முதுகைக் காட்டாதீர்கள். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு கோபம் வரலாம்.
Read more ; “நா இல்லாம உங்களால சாதிக்க முடியாது”; சவால் விட்ட செந்தில்; கவுண்டமணி கொடுத்த பதிலடி..