fbpx

கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம் அண்ணாமலை -செந்தில் பாலாஜி காட்டம்

தமிழக பாஜக தலைவரின் கைக்கடிகாரம் தான் தற்போது பேசு பொருளாகியுள்ளது, சுமார் 3 லட்சம் மதிப்புள்ள அந்த கடிகாரம் ரபேல் விமான பாகங்களில் இருந்து செய்யப்பட்டுள்ளது, எளிமை இன்றி தன்னை காட்டிக்கொள்ளும் அண்ணாமலை அவர்கள் எப்படி 3 லட்சம் மதிப்புள்ளா கடிகாரத்தை வாங்கினார் போன்ற கடுமையான விமர்சனங்களை திமுக உள்ளிட்ட பல தரப்பினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் தமிழா பாஜக தலைவர் அண்ணாமலை தனது டீவீட்டில் திமுகவினரை சீண்டியுள்ளார். அந்த பதிவில் “திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.

அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார், இதற்கு பதிலளிக்கும் விதமாக மின்வாரிய துறை அமைச்சர் ஒரு பதிவு ஒன்றை போட்டு அண்ணாமலையை கலாய்த்துள்ளார்.

மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிவில் “சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான். பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?” என்று தனது பதிவில் அண்ணாமலையை கிண்டிலடித்துள்ளார் செந்தில் பாலாஜி.

Kathir

Next Post

எம்ஜிஆர் சிலையிடம் ராஜினாமா கடிதம்..!! கதறி கதறி அழுத அதிமுக பிரமுகர்..!! என்ன காரணம்..?

Sun Dec 18 , 2022
அதிமுக முன்னாள் நகர கவுன்சிலரான சேகர், எம்.ஜி.ஆர். சிலையிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க கட்சியை விட்டு விலகினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் சேகர். இவர் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து பின்னர் 3 முறை சீர்காழி நகர மன்ற உறுப்பினராகவும், அதிமுக மாவட்ட பிரதிநிதியாகவும், கூட்டுறவு சங்க இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் பலமுறை கலந்து கொண்டு சிறை […]
எம்ஜிஆர் சிலையிடம் ராஜினாமா கடிதம்..!! கதறி கதறி அழுத அதிமுக பிரமுகர்..!! என்ன காரணம்..?

You May Like