பிக்பாஸ் சீசன் 8 போட்டி தொடங்கிய 24 மணிநேரத்தில் முதல் போட்டியாளர் எவிக்சன் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் போட்டியில், முதல் நாளான நேற்று 18 போட்டியாளர்களை அறிமுகம் செய்து விஜய் சேதுபது வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். இந்த சீசனில், தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், நடிகை சாச்சனா, தர்ஷா குப்தா, சின்னத்திரை நடிகர் தீபக், சத்யா, அருண் பிரசாத், விஜே விஷால், விஜே ஆனந்தி, சுனிதா, கானா ஜெப்ரி, செளந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷிகா, முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அறிமுக நிகழ்ச்சியின் நிறைவில், 24 மணிநேரத்தில் முதல் போட்டியாளர் எவிக்சன் முறையில் வெளியேற்றப்படுவார் என்று விஜய் சேதுபதி அறிவித்தது போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிக்பாஸ் தமிழ் 8-வது சீசனில் முதல் ஆளாக மகாராஜா நாயகி சாச்சனா வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் சொன்ன விதியை சக போட்டியாளர்கள் முடிவெடுத்து சாச்சனாவை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர். ஆனால், அவர் சீக்ரெட் ரூமிற்கு அனுப்பட்டாரா என்ற விவரம் வெளிவரவில்லை.
சாச்சனா இளம் போட்டியாளர் என்ற காரணத்தால் அவரை நாமினேட் செய்திருக்கலாம். நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் விஜய் சேதுபதி ஏற்கெனவே மகாராஜாவில் புகழ் கிடைத்துவிட்டது. தற்போது பிக்பாஸ் வருவதற்கு காரணம் என்ன ? என கேட்டார். போட்டியாளர்களை குழப்பும் விதமாக முதல் எவிக்ஷன் நடைபெற்றதா அல்லது சாச்சனா சீக்ரெட் ரூமுக்கு அனுப்பப்பட்டாரா என்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன.
Read More : ”இனியாவது கவனமா செயல்படுங்க”..!! மெரினா சம்பவம் தொடர்பாக விஜய் பரபரப்பு பதிவு..!!