கடந்த சில தினங்களாக விலை குறைந்து தங்கம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் 5,700 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,600 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,820-க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 6,290 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 50,320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 79.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 79,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.