fbpx

திருமணத்தையே மறந்து குடிபோதையில் மட்டையான மாப்பிள்ளை..!! அதிர்ந்துபோன பெண் வீட்டார்..!! ட்விஸ்ட்..!!

பீகார் மாநிலம் பகல்புர் மாவட்டம் சுல்தான்கஞ்ச் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. திருமணத்திற்காக மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் தடல் புடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளே உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வரத் தொடங்கினர். திருமண வீடு களை கட்டியிருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மாப்பிள்ளை மது போதையில் மிதந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் தனக்கு திருமணம் என்பதை மறக்கும் அளவுக்கு மாப்பிள்ளை குடித்துள்ளார். இதனால், மறுநாள் திருமணத்திற்கு செல்லாமல் மாப்பிள்ளை இருந்துள்ளார். திருமணம் நடைபெறும் இடத்தில் மணமகள் மற்றும் அவரது வீட்டினர் மாப்பிள்ளைக்காக காத்திருந்தனர். ஆனால், வெகு நேரம் ஆகியும் மாப்பிள்ளை திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இந்நிலையில், போதை தெளிந்து சுயநினைவுக்கு மாப்பிள்ளை வந்த பிறகு அவசர அவசரமாக பெண் வீட்டினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், திருமணத்தையே மறக்கும் அளவிற்கு மதுபோதையில் மிதக்கும் நபருடன் என்னால் வாழ முடியாது என்று முடிவு செய்த மணப்பெண் திருமணம் செய்ய மறுத்து விட்டார். தன்னையும் தனக்கு இருக்கும் கடமைகளைக் கூட மறக்கும் அளவிற்கு குடிக்கும் ஒரு நபருடன் எப்படி வாழ முடியும் என்று கருதிய மணப்பெண், திருமணத்தை நிறுத்திவிட்டார். அதேபோல், திருமணத்திற்கான செலவுத் தொகையை தங்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் பெண் வீட்டினர் மாப்பிள்ளையிடம் கேட்டுள்ளனர். திருமணத்திற்கான செலவு தொகையை திருப்பி கொடுத்தால் மட்டுமே மாப்பிள்ளை உறவினர்களை விடுவோம் என அவர்களை சிறை பிடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேசி பிரச்சனையை தீர்த்து வைத்ததாக சொல்லப்படுகிறது. சொந்த திருமணத்தையே மறக்கும் அளவுக்கு மணமகன் மது அருந்தி விட்டு தனது மணவாழ்க்கைக்கு சொந்த காசிலேயே வேட்டு வைத்துவிட்டாரே என்று அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து பரபரப்பாக பேசிக்கொண்டனர்.

Chella

Next Post

இந்திய மாணவர்களை வெளியேற்றிய கனடா..!! ஆவணங்களால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

Sat Mar 18 , 2023
இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதில், வட அமெரிக்க நாடான கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், போலி ஆவணங்களை சமர்பித்து கனடாவுக்கு வந்த குற்றச்சாட்டில் 700 இந்திய மாணவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த விசா ஏஜென்டான பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர் கனடாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். கனடாவில் உயர்கல்வி சேவைக்கு மாணவர்களை […]

You May Like