உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி மது குடிக்காததால் கணவர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை சார்ந்தவர் யுத்வேந்திரா இவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யுத்வேந்திரா மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்தி இருக்கிறார்.
மேலும் மனைவியிடமும் குடிக்க சொல்லி வலியுறுத்தி அடிக்கடி பிரச்சனை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று குடித்துவிட்டு வந்த யுத்வேந்திரா தனது மனைவியிடமும் குடிக்க சொல்லி தகராறு செய்து இருக்கிறார். இதற்கு அவர் மறுத்துள்ளதால் கோபத்தில் தனது மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கிறார். இதில் உடல் எல்லாம் வெந்து படுகாயமடைந்த அவரது மனைவியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது மனைவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் மீது சொந்த கணவனே தீவைத்துக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.