சர்வர் பிரச்சினை காரணமாக பத்திர பதிவுத்துறை மென்பொருள் சரி செய்யும் பணி நடப்பதால் வரும் 2-ம் தேதி முதல் ஆவணப்பதிவு, வில்லங்கச் சான்றிதழ் தங்கு தடையின்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில்; பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக துறையின் சார்பாகப் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பதிவுத்துறையால் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்டார் மென்பொருளில் கீழ்க்கண்ட புதிய அலகுகள் உருவாக்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன
1.ஆவணதாரர்களை ஆதார் வழி அடையாளம் கண்டு, ஆள்மாறாட்டத்தை முற்றிலும் தவிர்த்தல்.
2. வில்லங்கச்சான்றில் திருத்தம் மேற்கொள்ள இணையவழி விண்ணப்பித்தல்.
3. கிறிஸ்தவ திருமண வடிப்புகளை சம்பந்தப்பட்ட துணை பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையவழியிலோ விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுதல், ஒருங்கிணைந்த தணிக்கை அலகு, முதியவர்களுக்கு ஆவணப்பதிவில் முன்னுரிமை.
4. ஆவணங்களைப்பதிவு செய்வதற்காக பொதுமக்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு, சார்பதிவாளர் அலுவலகம் வந்த பின்னர், முன்பதிவு செய்த அதே வரிசையில் வரிசைக்கிரமமாக, எந்தவிதமான பாகுபாடுமின்றி ஆவணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5. பொதுவாக பொதுமக்கள் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே பதிவுக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்கின்றனர். மங்களகரமான நாட்களில் ஆவணப்பதிவு மேற்கொள்ள விரும்பி, ஒரே சமயத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கமாக உள்ளது.
