குஜராத் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளதாக நிலநடுக்கவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, பச்சாவிலிருந்து வடக்கு வடமேற்கு திசையில் 21 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் உணரப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக உயிா் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியா் அமித் அரோரா தெரிவித்துள்ளார். மிகவும் ஆபத்தான நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தில், குறைந்த தீவிரம் கொண்ட நிலஅதிா்வுகள் தொடா்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த 200ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமாா் 13,800 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.