fbpx

தினமும் “இதை” மட்டும் பண்ணுங்க; கட்டாயம் உங்களுக்கு மாரடைப்பே வராது..

பொதுவாக நமது முன்னோர் உணவே மருந்தாக சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் நாம் மருந்தை உணவாக சாப்பிடுகிறோம். நாகரீகத்தோடு சேர்ந்து நோய்களும் வளரந்துவிட்டது. எப்போது நாம் உணவை மருந்தாக சாப்பிடுகிறோமோ அன்று தான் நமது உடலின் ஆரோக்கியம் மேம்படும். அதே போல், ஆரோக்கியமான உணவு என்று அளவிற்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், நல்ல உணவுகளையும் அதிகமாக சாப்பிட கூடாது. அதுவும் நமது உடலில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அந்த வகையில், தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் பல நன்மைகளை ஏற்படும். நல்லது என்பதற்காக கை நிறைய பூண்டை சாப்பிட்டு விட கூடாது. ஒரு பல் பூண்டை நசுக்கி, காற்றோட்டமாக சில நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பின்னர் சாப்பிட்டால், பூண்டின் முழு மருத்துவ நன்மைகளும் நமக்கு கிடைக்கும். பூண்டில் உள்ள அலிசின் என்ற வேதிப்பொருள், நமது உடலில் நைட்ரிக் ஆக்ஸைட் உற்பத்தியை அதிகப்படுத்தும். இதனால், இரத்த கொதிப்பு கட்டுக்குள் இருப்பது மட்டும் இல்லாமல், மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.

உணவு செரிமானத்திற்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ப்ரீ பையோடிக் தேவைப்படும். அந்த ப்ரீ பையோடிக் பூண்டில் அதிகம் இருப்பதால் அது குடலுக்கு மிகவும் நல்லது. இதனால் செரிமான மண்டலம் சரியாக வேலை செய்ய, தினசரி 1 பல் பூண்டு சாப்பிடலாம். பூண்டில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் மற்றும் அன்டி இன்ஃப்ளமேட்ரி பண்புகள், நம் உடலின் செல்களை பாதுகாக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூண்டு ஒரு சிறந்த மருந்து.

Read more: திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையா? அப்போ உடனே இதை செய்யுங்க.. ஆதிகாலத்தில் பின்பற்றப்பட்ட சித்த வைத்தியம்!!

English Summary

easy home remedy to prevent from heart attack

Next Post

தமிழகமே...! இன்று 5 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு...! வானிலை மையம் அலர்ட்

Sun Jan 12 , 2025
Heavy rain likely in 5 districts today...! Meteorological Department alert

You May Like