பொதுவாக நமது வீட்டில் குளியல் அறைக்கு பின்னர் அசுத்தமாக இருப்பது வாஷ்பேஷன் தான். வாஷ்பேஷன் சுத்தமாக இல்லையெனில், வீட்டிற்க்கு வருபவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தும். ஆனால் தினமும் நாம் பல் துலக்குவது முதல், முகம் கழுவுவது வரை வாஷ்பேஷனை பயன்படுத்துவதால் பல வீடுகளில் வாஷ்பேஷன் கரைகள் படிந்து மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும்.
அப்படி பல வருடங்களாக அசுத்தமாக இருக்கும் உங்கள் வாஷ்பேஷனை எப்படி சுத்தம் செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லையா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். இந்தப் பதிவில், பேக்கிங் சோடாவை வைத்து எப்படி அழுக்கு மற்றும் மஞ்சள் நிறமான வாஷ்பேஷனை சுத்தம் செய்வது என்று தெரிந்துக் கொள்ளுங்கள். பேக்கிங் சோடா கறைகளை நீக்க பெரிதும் உதவும்.
வாஷ்பேஷனை சுத்தம் செய்ய முதலில் பேக்கிங் சோடாவை வாஷ்பேஷன் முழுவதும் தூவி விடுங்கள். பின்னர் வினிகரை பேக்கிங் சோடா மீது ஊற்றுங்கள். உடனே அது நுரைக்கத் தொடங்கும். இப்போது சிறிது நேரம் அதனை அப்படியே விட்டுவிடவும். பின்னர், சுத்தமான ஒரு துணி அல்லது ஸ்க்ரப் வைத்து வாஷ் பேசினை நன்கு தேய்க்க வேண்டும்.
இப்போது வாஷ்பேஷனில் பல வருடங்களாக படிந்திருக்கும் கறைகள் சுலபமாக நீங்கி புதுசு போல் மாறிவிடும். உங்களிடம் வினிகர் இல்லையென்றால், அதற்கு பதில் நீங்கள் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம். இதற்கு வாஷ்பேஷனில் பேக்கிங் சோடாவை தூவி, அதற்கு மேல் எலுமிச்சை சாற்றை பிழியவும். பின் அதனை வாஷ்பேஷன் முழுவதும் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து விடுங்கள்.
பின்னர் வாஷ் பேசினை கழுவினால் அனைத்து கறைகளும் மறைந்து புதுசு போல் ஜொலிக்கும். கழிப்பறையை சுத்தம் செய்ய கடைகளில் விற்கப்படும் லிக்விடை பயன்படுத்தலாம். ஆனால், அவற்றை அதிகம் பயன்படுத்தும் போது, வாஷ்பேஷனின் மேற்பரப்பு சேதமடைந்து அதன் பளபளப்பு போய்விடும். இதனால் முடிந்த வரை, அதிக கெமிக்கல் நிறைந்த லிக்விடை பயன்படுத்த வேண்டாம்.
Read more: வாட்டர் பாட்டிலில் இந்த ஒரு பொருளை போடுங்க.. மருந்தே இல்லாமல் பாதி வியாதி குணமாகிவிடும்..