நாம் அனுதினம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். பலர் ஏலக்காய்யை நறுமணத்திற்காக மட்டும் தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் பலருக்கு ஏலக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிவது இல்லை. நாட்டு வைத்தியம் மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம், அஜீரண கோளாறு, வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம், குமட்டல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க ஏலக்காய் பயன் படுத்தப்படுகிறது. ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், ஏலக்காயில் இருக்கும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
பொதுவாக நாம் ஏலக்காயை சமையலில் சேர்ப்போம். ஆனால் அதற்க்கு பதில், நீங்கள் ஏலக்காயை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை, தொடர்ந்து 30 நாட்கள் குடித்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். அந்த வகையில், என்ன பிரச்சனைகள் எல்லாம் நீங்கும் என்பதை பற்றி பார்ப்போம்.. இந்த நீரை தொடர்ந்து குடிப்பதால், சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள முடியும். ஆம், இந்த நீர் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். எனவே சர்க்கரை நோய் வரக்கூடாது என்றால் ஏலக்காய் நீரை கட்டாயம் குடியுங்கள்.
மேலும் இந்த ஏலக்காய் நீர், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். ஏனெனில் ஏலக்காய் நீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். மேலும், ஏலக்காயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும். மேலும் இந்த நீர், செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்விலும் ஏலக்காய் வயிற்றுப் புண்களை குணப்படுத்த உதவுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நீர், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அதுமட்டும் இல்லாமல், ஏலக்காய் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவும்.
Read more: இனி சப்பாத்தி சுடும் போது ஒரு ஸ்பூன் நெய் தடவுங்க… கேன்சரை கூட தடுக்கலாமாம்..