தற்போது உள்ள காலகட்டத்தில், எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். பிஸி என்ற வார்த்தையை பயன்படுத்தி, பல விஷயங்களை சரியான நேரத்திற்கு செய்யாமல் தாமதமாக செய்து வருகிறோம். உதாரணமாக, சாப்பிடுவது, தூங்குவது, தூங்கி எழுவது போன்ற எதையுமே நாம் சரியான நேரத்திற்கு செய்வதில்லை. குறிப்பாக இரவு உணவு என்று வந்துவிட்டால், நேரம் காலம் தெரியாமல் கண்ட நேரத்தில் சாப்பிடுகிறோம். ஆனால் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில், இரவு உணவுக்கு மாலை 5 மணியே சிறந்த நேரம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் 5 மணிக்கு பிறகு நாம் சாப்பிடுவதால், சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படி இரவில் தாமதமாக சாப்பிடுவதால், இன்சுலின் சுரப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இரவில் இன்சுலின் சுரப்பு குறைவதால், உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இரவில் தாமதமாக சாப்பிடுவதால், கொழுப்பை எரிக்கும் உடலின் திறன் குறைந்து விடும். இதனால் உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை, இரவில் தாமதமாக சாப்பிடுவதால் தூக்கம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் இதய நோய், பக்கவாதம் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். மேலும், ஆசிட் ரிஃப்ளக்ஸ், அஜீரணம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
Read more: உங்கள் குழந்தைகள் எந்த நோயும் இல்லாமல், ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?? அப்போ இந்த ஒரு உணவு போதும்…