fbpx

அட்டகாசம்…! மாணவர்களுக்கு கல்வி கடன் & வட்டி மானியம் வழங்கும் திட்டம்…! மத்திய அரசு ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் தேசிய கல்விக் கொள்கை- 2020-ன் கீழ் மற்றொரு முக்கிய முயற்சியாகும். இது அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்க வகை செய்யும் திட்டமாகும். இதன் கீழ், தலைசிறந்த உயர்கல்வி நிறுவனத்தில் (QHEIs) சேர்க்கை பெறும் எந்தவொரு மாணவரும் வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து பிணையம் இல்லாத, உத்தரவாதம் இல்லாத கடனைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

எளிய மாணவர்களுக்கு ஏற்ற எளிய நடைமுறைகளின் மூலம் முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும் திட்டம் இதுவாகும். என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசைகளால் தீர்மானிக்கப்பட்டபடி, நாட்டின் தரமான உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி (கியூஎச்இஐ) நிறுவனங்களில் சேரும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். இத்திட்டம் கல்விக் கடன் மற்றும் வட்டி மானியம் உள்ளிட்ட பல பயன்களைக் கொண்டதாகும்.

உயர்கல்வித் துறை பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணையதளத்தில் மாணவர்கள் கல்விக் கடன், வட்டி மானியம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்திய இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வியை இத்திட்டம் உறுதிசெய்யும் என்பதுடன், தொழில்நுட்ப / தொழில்முறை கல்வியில் உயர்கல்வியைத் தொடர தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான ஆதரவை வழங்கும்.

English Summary

Educational Loan & Interest Subsidy Scheme for Students.

Vignesh

Next Post

வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...! இந்த 11 மாவட்டத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை...!

Thu Nov 7 , 2024
According to the Meteorological Department, there is a chance of rain in Tamil Nadu till the 12th.

You May Like