நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய அறிவிப்புகள், அது தொடர்பான அரசாணைகள் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு துறைகளின் செயலர்களுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார். அதில், ”கடந்த தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முன் தேதியிட்டு அறிவிப்பு அரசாணை வெளியானதால் சர்ச்சை எழுந்தது. துறைகளின் செயலர்கள் அரசாணை தொடர்பான பதிவேட்டில் இறுதி அரசாணை வெளியிட்ட பின்பு ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும்.
ஒரு கோடிட்டு முடிப்பதை நகல் எடுத்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இதனால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம். கோடிட்டு முடித்த அரசாணை நகலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள்ளாக அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : Annamalai | மக்களவை தேர்தலில் அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டி..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!!