மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்ததாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாரை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் வழங்கிய திமுக வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், ”கடந்த மார்ச் 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்று மதத்தின் பெயரால் ஓட்டு கேட்டிருக்கிறார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், ‘நமது கோயிலையே அழிக்க கூடிய, நமது மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கு எல்லாம் ஏன் ஓட்டு போடுகிறீர்கள்’ என்று கூறியிருக்கிறார். தேர்தல் விதியின்படி மத ரீதியில் ஓட்டு கேட்கக் கூடாது. இதன்மூலம் அவர் தேர்தல் விதியை மீறியிருக்கிறார். அதேபோல மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற விதிமுறையையும், நிர்மலா சீத்தாராமன் மீறியிருக்கிறார். இந்த சட்டமீறல்களுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்” என்றார்.
Read More : ’எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தனி பட்ஜெட்’..!! ’ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!