fbpx

Election | ’இப்படியெல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது’..!! அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!!

சாதி, மதம், மொழி மற்றும் இறைவழிபாட்டை அவமதிக்கும் கூற்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது என அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக பிரசாரமும் துவங்கிவிடும். அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்காளர்களை கவர்வதற்கு பல்வேறு வியூகங்களை கையாண்டு வருகின்றன. வழக்கமாக தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்படும்போதே அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகளையும் சேர்த்தே தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும்.

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் சாதி, மதம், மொழி, இறை வழிபாட்டை அவமதிக்கும் பேச்சுகள் ஆகியவற்றை கூறி மக்கள் இடையே வாக்குகள் சேகரிக்கக் கூடாது என அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கண்ட அறிவுறுத்தல் இடம்பெற்றுள்ளது.

மேலும், ஏற்கெனவே தேர்தல் விதிகளை மீறிய புகாரில் தேர்தல் ஆணையத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள், மீண்டும் அதே குற்றச்சாட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களைத் திசை திருப்பும் வகையிலான பொய் பிரசாரங்களை செய்யக் கூடாது. பெண்கள் மீதான மரியாதை, கண்ணியத்துக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. சோசியல் மீடியாக்களில் கண்ணியமான பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். எதிர் தரப்பினரை அவமதிக்கும் பதிவுகளை வெளியிடக் கூடாது. அங்கீகரிக்கப்படாத, தவறான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

Read More : R.S.Bharathi | ’வரும் தேர்தலில் அதிமுக எந்த சின்னத்தில் போட்டியிடும் தெரியுமா’..? ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு..!!

Chella

Next Post

ADMK | 'இன்னும் 4 நாட்களில் தேர்தல் அறிக்கை'..!! ஜெட் வேகத்தில் செயல்படும் அதிமுக..!! பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

Sat Mar 2 , 2024
இன்னும் 4 நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியாகும் எனவும், அது மக்களிடம் பேசுபொருளாக இருக்கும் எனவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதனால் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்னும் 4 நாட்களில் அதிமுகவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் […]

You May Like