தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்பட வேண்டும் என்று, பல வருடங்களாக தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் தேசிய கட்சிகள் தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் தான், கடந்த 2015 ஆம் வருடம் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2019 ஆம் வருடம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆகவே எதிர்வரும் ஆண்டு முதல் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்கும் என்றும், வரும் 2026 ஆம் வருடம் மே மாதத்திலிருந்து, எய்ம்ஸ் மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் கட்டப்பட்டிருக்கின்ற மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூபாய் 650 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே 2600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எய்ம்ஸ் மருத்துவமனை, பொதுமக்களின் இடையே பயன்பாட்டிற்கு வந்தால், சற்றேற குறைய 22,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.