fbpx

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளிலேயே இவ்வளவு விண்ணப்பங்களா?

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர 20,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) நேற்று வெளியான நிலையில், 2024-2025ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, (மே. 6) முதல் ஜூன் 6 வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

மேலும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு ரூ 500, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ 250 பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் 20,097 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rupa

Next Post

லோக்சபா தேர்தலையொட்டி திட்டமிடப்பட்ட மிகப்பெரிய நக்சலைட்டு தாக்குதல்…! சரியான நேரத்தில் முறியடித்த காவல்துறை..!

Tue May 7 , 2024
மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகளின் மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதலை காவல்துறை தடுத்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆறு பிரஷர் குக்கர்கள், வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் திபாகட் பகுதியில் வெடி மருந்து பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின் பேரில், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் 2 வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுக்களின் உதவியுடன் அங்கு சோதனை நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலை சீர்குழைக்கும் நோக்கில் திட்டமிட்டு […]

You May Like