fbpx

தல பேசினாலே போதும்!… தோனியின் கேப்டன்சியில் ஆடினால் எதையும் சாதிக்கலாம்!… அஜிங்க்யா ரஹானே பேச்சு!

தல தோனியின் கேப்டன்சியில் ஆடும்போது எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று சென்னை அணி வீரர் அஜிங்க்யா ரஹானே கூறியுள்ளார்.

ஐபிஎல் 16வது சீசன் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சீசன் தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இதனை வழிநடத்தும் தலைவரான தோனியை பற்றிதான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டுவருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை நிகழ்த்திவருகிறது. இதுமட்டுமின்றி தோனிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரம் தொடங்கி கிராமம் வரை உள்ளது. இப்படியான பேரன்பிற்குரிய ரசிகர் பட்டாளத்தினைக் கொண்டுள்ள தோனியின் கடைசி போட்டி எதுவாக இருக்கும் என்ற கேள்வி அவர்களது ரசிகர்களிடத்திலும் உள்ளது. இயல்பாகவே இவருக்காக மைதானத்திற்கு வந்து போட்டியைப் பார்ப்பவர்கள் ஏராளம்.

ஐபிஎல்லில் 4 முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்வது சிஎஸ்கே அணி. அதற்கு முக்கியமான காரணம் கேப்டன் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் தோனி. பெரிய வீரர்களை மட்டும் வைத்து ஆடாமல், இளம் வீரர்களை அணியில் எடுத்து அவர்களது திறமையை முழுமையாக பயன்படுத்தி வெற்றிகளை பறிக்கும் வித்தையறிந்தவர் தோனி. மற்ற கேப்டன்களின் கீழ் சரியாக ஆடாத வீரர்களும் கூட தோனியின் கேப்டன்சியில் சிறப்பாக ஆடி மேட்ச் வின்னர்களாக ஜொலித்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஷேன் வாட்சன், மொயின் அலி ஆகிய வீரர்கள் ஐபிஎல்லில் வேறு அணிகளில் ஆடியதை விட தோனியின் கேப்டன்சியில் அபாரமாக ஆடி சிஎஸ்கேவிற்கு வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கின்றனர். அந்தவரிசையில் இப்போது ரஹானேவும் இணைந்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, ஐபிஎல்லிலும் அனைத்து அணிகளாலும் கைவிடப்பட்ட அஜிங்க்யா ரஹானேவை ரூ.50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே அணி, அவர் மீது நம்பிக்கை வைத்து 3ம் வரிசையில் இறக்கிவிட்டு சுதந்திரமாக ஆடவிட்டது. சிஎஸ்கேவிற்காக இறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரஹானே, கேகேஆருக்கு எதிராக நேற்று ஆடிய போட்டியில் 19 பந்தில் அரைசதம் அடித்து ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்காக அதிவேக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் ரஹானே. இந்த சீசனில் அஜிங்க்யா ரஹானே சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்கிறார்.

இந்நிலையில், கேகேஆருக்கு எதிரான போட்டிக்கு பின் பேசிய அஜிங்க்யா ரஹானே, இதுவரை நான் இந்த சீசனில் ஆடிய இன்னிங்ஸ்களை ரசித்து மகிழ்ந்து ஆடியிருக்கிறேன். இன்னும் எனது சிறப்பான இன்னிங்ஸ் வரவில்லை என்றே நினைக்கிறேன். இதுவரை ஆடியதைவிட சிறப்பான பேட்டிங் என்னால் ஆடமுடியும். தோனியின் கேப்டன்சியில் நீண்டகாலம் ஆடியிருக்கிறேன். அவரது கேப்டன்சியில் ஆடுவது மிகப்பெரிய படிப்பினை. அவர் பேசுவதை கவனித்தாலே எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று ரஹானே கூறியுள்ளார்.

Kokila

Next Post

மக்களே உஷார்!... நம்புற மாதிரியே சொல்லுவாங்க!... ஏமாந்திடாதீங்க! யூடியூப் மூலம் மோசடி செய்யும் கும்பல்!

Wed Apr 26 , 2023
யூடியூப் வீடியோக்களை லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்தாலே பணம் கிடைக்கும் வகையில் பகுதிநேர வேலை என்று கும்பல் ஒன்று மோசடியில் ஈடுபட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப உலகத்தில் ஸ்மார்ட்போன் பிரிக்க முடியாத சக்தியாக மாறிவிட்டது. போன்பயன்படுத்தாதோரின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது. சூப்பர் மார்க்கெட் முதல் கடைக்கோடி பெட்டிக்கடை வரையிலும் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அதன் மூலம் […]

You May Like