அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.. பொன்னையன்.அதிமுக செயற்குழுவில் 16 வரைவு தீர்மானங்களை வாசித்தார்.. அதிமுக செயற்குழு, பொன்னையன் வாசித்த 16 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது.. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும் ரத்து செய்யப்பட்டது.. 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்ற்பட்டது.. துணை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பு, இனி துணை பொதுச்செயலாளர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் பொதுச்செயலாளராக போட்டியிட தலைமை கழகப் பொறுப்புகளில் 5 ஆண்டுகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.. விதிகளை தளர்த்துவதற்கு பொதுச் செயலாளராருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.. பொதுச்செயலாளர் தேர்வு குறித்து விதியை மாற்றவோ, திருத்தவோ முடியாது..