fbpx

யூரோ 2024!. இத்தாலி, சுலோவாகியா அணிகள் அதிர்ச்சி தோல்வி!. எழுச்சியுடன் முதல் வெற்றியை பதிவு செய்த உகரைன்!

Euro 2024: நேற்றைய யூரோ’ கோப்பை கால்பந்து லீக் போட்டிகளில் இத்தாலி, சுலோவாகிய அணிகள் அதிச்சி தோல்வியை அடைந்தன.

ஜெர்மனியில் யூரோ’ கோப்பை கால்பந்து லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்-8’ ஸ்பெயின் அணி, 10வது இடத்தில் உள்ள ‘நடப்பு சாம்பியன்’ இத்தாலி அணியை சந்தித்தது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் ஸ்பெயினின் நிகோ வில்லியம்ஸ் அடித்த பந்து, இத்தாலி கோல்கீப்பர் ஜியான்லுாகி டோனாரும்மா கையில் பட்டு திரும்பியது. இதை இத்தாலியின் ரிக்கார்டோ கலாபியோரி வெளியே தள்ள முயற்சித்தார். ஆனால் பந்து, அவரது காலில் பட்டு வலைக்குள் சென்று ‘சேம்சைடு’ கோல் ஆனது.

ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என 2வது வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் குரோஷியாவை வென்ற ஸ்பெயின், 6 புள்ளிகளுடன் ‘ரவுண்டு-16’ போட்டிக்கு முன்னேறியது. ‘யூரோ’ கோப்பையில் 18 போட்டிகளின் முடிவில் (ஸ்பெயின்-இத்தாலி), 47 கோல் பதிவாகின. இதில் 5 ‘சேம்சைடு’ கோல் அடங்கும். கடந்த சீசனில் (2021) அதிகபட்சமாக 11 ‘சேம்சைடு’ கோல் அடிக்கப்பட்டன.

இதேபோல், நேற்று டசல்டார்ப்பில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில், ‘யூரோ’ கோப்பை கால்பந்து தொடருக்கான ‘இ’ பிரிவு லீக் போட்டியில் சுலோவாகியா, உக்ரைன் அணிகள் மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் சுலோவாகியாவின் இவான் ஷ்ரான்ஸ் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, மைகோலா ஷபரென்கோ (54வது நிமிடம்) ரோமன் யாரேம்சுக் (80வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். முடிவில் உக்ரைன் அணி 2-1 என்ற கணக்கில் முதல் வெற்றி பெற்றது.

Readmore: யூரோ 2024!. உத்வேகம் பெற்ற ஆஸ்திரியா!. போலந்துக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி!

English Summary

Spain beat Italy in euro 2024

Kokila

Next Post

சுப நிகழ்ச்சிகளில் 1 ரூபாயை ஏன் தனியாக கொடுக்கிறார்கள் தெரியுமா?. சிறப்பு காரணம்!

Sat Jun 22 , 2024
Do you know why they give 1 rupee separately in auspicious events?. Special reason!

You May Like